இந்தியா

’பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 21 நாட்களில் தூக்கு’ - புதிய சட்டத்தை நிறைவேற்றும் ஜெகன் மோகன் !?

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் மரண தண்டனை வழங்குவது குறித்து சிறப்பு சட்ட திருத்தத்தை கொண்டுவர ஆந்திரா அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

’பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 21 நாட்களில் தூக்கு’ - புதிய சட்டத்தை நிறைவேற்றும் ஜெகன் மோகன் !?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த சில தினங்களுக்கு முன், தெலங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரம் இடைவெளியில் மட்டும், 6 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், நாடு முழுவதிலும் இருந்து இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா மாநில அரசு பாலியல் குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனையாக, தூக்குத் தண்டனை வழங்க சிறப்பு சட்ட திருத்தத்தைக் கொண்டு வர முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, ஆந்திராவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு அதுதொடர்பான வழக்கு விசாரணையை ஒருவாரத்தில் நடத்தி முடிக்கவும், அடுத்த இரண்டு வாரத்திற்குள் குற்றவாளியை தூக்கிலிடச் செய்யவும் சிறப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 21 நாட்களில் தூக்கு’ - புதிய சட்டத்தை நிறைவேற்றும் ஜெகன் மோகன் !?

மேலும், 21 நாட்களுக்குள் குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை வழங்கும் வகையிலும், அதற்காக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் பாலியல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைப்பது போன்ற திருத்தங்கள் அடங்கிய அந்த மசோதாவை ஆந்திரா சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்துப் பேட்டியளித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “நிர்பயா பெயரில் புதிய சட்டம் ஒன்றை இயற்றப்போகிறோம். இன்றுவரை நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வந்தும் அவர்கள் தூக்கிலிடவில்லை. பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை அளிப்பது சமூகத்துக்கு நல்லது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஜெகன்மோகனின் இந்தப் பேச்சு ஆந்திர மாநில மக்களிடையே ஆதரவை பெற்று இருந்தாலும், மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போலிஸாரின் அலட்சியத்தால் சில நேரங்களில் தவறான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் வலியுறுத்தியுவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories