இந்தியா

தருமபுரி தொகுதிக்கு பல்வேறு ரயில் வசதிகள் வேண்டி ரயில்வே இணை அமைச்சரிடம் தி.மு.க எம்.பி., மனு!

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு ரயில் வசதிகள் வேண்டி தி.மு.க எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமார் ரயில்வே இணை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

தருமபுரி தொகுதிக்கு பல்வேறு ரயில் வசதிகள் வேண்டி ரயில்வே இணை அமைச்சரிடம் தி.மு.க எம்.பி., மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு ரயில் வசதிகள் வேண்டி தி.மு.க எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமார் ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

தருமபுரி தி.மு.க எம்.பி., டாக்டர்.எஸ்.செந்தில்குமார் அளித்த மனுவில், “நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும், அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து செயல் படுத்த வேண்டும்.

காலை 6 முதல் 8 மணி வரையிலும், மாலை 5 முதல் 7 மணி வரை உள்ளூர்களுக்கு இடையே ஓடும் ரயில்கள் தேவை தருமபுரியில் அதிகம் உள்ளது. தருமபுரியில் நான்கு ரயில்வே டிராக்குகள் இருப்பதால், தருமபுரியில் இருந்து அதிக ரயில்கள் தொடங்கப்பட வேண்டும்.

கடந்த 2016ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்ட பி.ஒய்.பி.எல் மற்றும் ஒ.எம்.ஏவிற்கு இடையில் மின்சாரமையமாக்கல் விரைவாக முடிக்கப்பட வேண்டும். மொரப்பூர்- தருமபுரி வழித்தடம் மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட வேண்டும்.

ஓசூர்- தருமபுரி- மொரப்பூர் இடையிலான வழித்தடத்தில் இரட்டை பாதை மற்றும் மின்சாரமயமாக்கலுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட வேண்டும். சிக்னல் நடைமுறை சிக்கல். காலையில் எஸ்பிசியில் இருந்து இன்டர்சிட்டிக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.

தருமபுரி தொகுதிக்கு பல்வேறு ரயில் வசதிகள் வேண்டி ரயில்வே இணை அமைச்சரிடம் தி.மு.க எம்.பி., மனு!

தினசரி பயணிப்பவர்களுக்காக அனைத்து விரைவு ரயில்களும் நிலையங்களில் நிறுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும். தருமபுரி- பெங்களுரு இடையிலான அனைத்து ரயில்களும் குறித்த நேரத்திற்கு வர வேண்டும்.

பாலக்கோட்டின் நடைமேடை உயர்த்தப்பட வேண்டும். தருமபுரி முதல் பெங்களூரு வரை படுக்கை வசதியில், எஸ்பிசி - மைசூரு ரயில்களை போல தினசரி பயணம் செய்பவர்களை அனுமதிக்க வேண்டும்.

தருமபுரி, திருச்சி, காரைக்குடி வழியாக ஓசூர் முதல் ராமேஸ்வரம் வரையிலான ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். யஸ்வந்த்பூர்- புதுச்சேரி இடையில் விரைவு ரயில்கள் தினசரி வேண்டும்.

தருமபுரி ரயில் நிலையத்தில் இரண்டாம் எண் நடைமேடையில் 80 சதவிகித ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த இரண்டாம் எண் நடைமேடை பயன்படுத்துவதற்கு வயதானவர்கள் மிகவும் சிரமப்படுவதால் அவற்றை நடைமேடை எண் ஒன்றில் நிறுத்த வேண்டும்.

வயதானவர்களுக்கான சிறப்பு வசதியாக தருமபுரி ரயில் நிலையத்தின் நடைமேடை எண் இரண்டில் மின் தூக்கி அல்லது நகரும் படிக்கட்டுக்களை அமைக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories