அரசியல்

திருமாவும் தருமபுரி செந்தில்குமாரும் : இந்தச் சந்திப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது?

சனாதன பா.ஜ.க பெரும்பான்மை பெற்றிருக்கும் நாடாளுமன்றத்தில் திருமாவளவனின் குரல் ஒலித்தாக வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்திருக்கிறோம்.

திருமாவும் தருமபுரி செந்தில்குமாரும் : இந்தச் சந்திப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது தி.மு.க கூட்டணி. தமிழகத்தின் 38 தொகுதிகளில் கடைசியாக முடிவு அறிவிக்கப்பட்டது சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தான். காரணம், அங்கு போட்டியிட்டது சனாதனத்துக்கு எதிரான சமரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் திருமாவளவன்.

சிதம்பரம் தனி தொகுதி என்றாலும், திருமாவளவன் வென்றுவிடக்கூடாது என்பதில் குறியாய் இருந்தனர் சாதியவாதிகளும், சனாதானத்தை முன்னெடுக்கும் கட்சிகளும். காரணம், அ.தி.மு.க-வின் தலித் வேட்பாளருக்கும் திருமாவுக்கான வித்தியாசத்தை அவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அவரது வெற்றி அறிவிப்புக்காக தமிழகத்தின் அத்தனை முற்போக்குவாதிகளும், திராவிட இயக்கத்தினரும் காத்திருந்தனர். ஏனெனில், இன்றைக்கு திருமா அந்தளவுக்குத் தேவைப்படுகிறார்.

சனாதன பா.ஜ.க பெரும்பான்மை பெற்றிருக்கும் நாடாளுமன்றத்தில் திருமாவளவனின் குரல் ஒலித்தாக வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அவரது வெற்றி சாதியவாதிகளுக்கும், அவரை எதிர்க்கும் சாதிக் கட்சியினருக்கும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, பா.ம.க-வினர் திருமாவளவனின் வெற்றியை ரசிக்கவில்லை

Thol. Thirumavalavan & Dr. Senthilkumar
Thol. Thirumavalavan & Dr. Senthilkumar

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தோற்கவேண்டும்; தருமபுரி தொகுதியில் பா.ம.க-வின் அன்புமணி ஜெயிக்கவேண்டும் என்பதுதான் பலரின் நோக்கமாக இருந்தது. வாக்குப்பதிவு நடைபெற்றபோதே சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் திருமாவின் ‘பானை’ சின்னம் வரையப்பட்டிருந்த தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர் பா.ம.க-வினர்.

அவர்களின் கணிப்புகளையும் கனவுகளையும் மீறி திருமா வென்றார்; அன்புமணி தோற்றார். திருமாவளவனின் தேர்தல் பரப்புரையின்போதே, சமூக நல்லிணக்கத்தை விரும்பும் வன்னியர் சமுதாய மக்கள் பலரும் திருமாவளவனை வெளிப்படையாக ஆதரித்தனர். வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமாவளவனை அளவளவாவிய காட்சி அத்தனை உணர்ச்சிமிகுந்ததாக இருந்தது.

திருமாவும் தருமபுரி செந்தில்குமாரும் : இந்தச் சந்திப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது?

இதோ, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தருமபுரியில் அன்புமணியை வென்ற டாக்டர்.செந்தில்குமாரும், சிதம்பரத்தில் வென்ற தொல்.திருமாவளவனும் சந்தித்து அளவளாவியிருக்கிறார்கள். சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் தலைதூக்கியிருக்கும் இத்தருணத்தில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இது சமூக மாற்றத்திற்கான நம்பிக்கை மிகுந்த தொடக்கப்புள்ளி.

banner

Related Stories

Related Stories