இந்தியா

NEFT மூலம் இனி எந்நேரமும் பணம் அனுப்பலாம் - அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!

24 மணிநேரமும் பணப்பரிவர்த்தனை செய்யும் வகையில் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி

NEFT மூலம் இனி எந்நேரமும் பணம் அனுப்பலாம் - அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆர்பிஐ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, NEFT பரிவர்த்தனை முறையில் சேவைக் கட்டணம் வசூலிப்பது தவிர்த்தல் மற்றும் 24 மணிநேரமும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவை வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுவரையில் காலை 8 முதல் மாலை 7 மணி வரை மட்டுமே NEFT & RTGS முறைகளில் பணம் அனுப்பும் வகையில் இருந்தது. இதற்காக NEFTல் ரூ.2.5 முதல் ரூ.25 வரையிலும், RTGSல் ரூ.65 வரையும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் அறிவிப்பின் மூலம் விடுமுறை நாட்கள் உட்பட 24 மணிநேரமும் NEFTல் பணப் பரிவர்த்தனையை செய்துக்கொள்ளலாம் என்றும் சேவைக்கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் ஆர்பிஐ அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories