இந்தியா

உயிரிழக்கும் தருவாயில் உன்னாவ் பெண் விரும்பியது என்ன தெரியுமா? - மனதை உலுக்கும் கதறல்!

தான் மீண்டெழவேண்டும் என விரும்பிய உன்னாவ் பெண் உயிரிழந்த துயரச் செய்தி நாடு முழுவதுமுள்ள பெண்களையும், பொதுமக்களையும் பதறச் செய்துள்ளது.

உயிரிழக்கும் தருவாயில் உன்னாவ் பெண் விரும்பியது என்ன தெரியுமா? - மனதை உலுக்கும் கதறல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு மனதளவில் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், நணபர்களோடு சேர்ந்து அவரை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டு அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண், தன்னை வல்லுறவுக்கு உள்ளாக்கிய இருவர் மீது கடந்த ஆண்டு டிசம்பரில் போலிஸாரிடம் புகார் அளித்தார். போலிஸார் நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து அப்பெண் போராடி வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நபரும் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

உயிரிழக்கும் தருவாயில் உன்னாவ் பெண் விரும்பியது என்ன தெரியுமா? - மனதை உலுக்கும் கதறல்!

இளம்பெண் தொடுத்த வழக்கு விசாரணை ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்ம், கடந்த 4ம் தேதி விசாரணைக்காக காலையிலேயே புறப்பட்டுச்சென்றார் அப்பெண். அவரை நீதிமன்றத்திற்குச் செல்லவிடாமல் தடுத்த குற்றவாளிகள் உள்ளிட்ட ஐந்து பேர், அவரைத் தூக்கிச்சென்று கடுமையாகத் தாக்கி, கழுத்தில் கத்தியாலும் குத்தினர்.

இதையடுத்து அப்பெண் மயங்கி கீழே விழுந்ததும், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். உடல் எரியத் தொடங்கியதும், தன்னைக் காப்பாற்றுமாறு கத்திக்கொண்டே நீண்ட தூரம் ஓடியுள்ளார். அப்பகுதியில் வந்த ஒருவர் உதவ, ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் தருவாயில் உன்னாவ் பெண் விரும்பியது என்ன தெரியுமா? - மனதை உலுக்கும் கதறல்!

இதற்குள் தகவலறிந்து அப்பெண்ணின் சகோதரரும் அந்த இடத்திற்கு வந்து, தீயைப் போராடி அணைத்தபின், ஆம்பூலன்ஸ் மூலம் லக்னோ மருத்துவமனையில் அனுமதித்தனர். 90% தீக்காயத்தோடு இருந்ததால், தீவிர சிகிச்சைக்காக விமானம் மூலமாக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டு, உத்தர பிரதேச சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று இரவு 11.40 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார்.

உயிரிழக்கும் தருவாயில் உன்னாவ் பெண் விரும்பியது என்ன தெரியுமா? - மனதை உலுக்கும் கதறல்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, நீதிக்காகப் போராடிவந்த நிலையில், மீண்டும் கடுமையாகத் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட அப்பெண் உயிரிழப்பதற்கு முன்னதாக, “என்னைக் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... நான் உயிருடன் இருக்கவேண்டும். அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டும்” என மருத்துவர்களிடம் கதறியதாக அப்பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

உயிரிழக்கும் தருவாயிலும், தன்னைச் சீரழித்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர தான் மீண்டெழவேண்டும் என விரும்பிய அந்தப் பெண் இப்போது இல்லை. இந்தத் துயரச் செய்தி நாடு முழுவதுமுள்ள பெண்களையும், பொதுமக்களையும் பதறச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories