இந்தியா

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை ஜாமீனில் வெளிவந்து குத்திக் கொலை செய்த குற்றவாளி

மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறை சென்றவன் ஜாமீனில் வெளிவந்து அந்த சிறுமியைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை ஜாமீனில் வெளிவந்து குத்திக் கொலை செய்த குற்றவாளி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறை சென்றவன் ஜாமீனில் வெளிவந்து அந்த சிறுமியைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை ஜாமீனில் வெளிவந்து குத்திக் கொலை செய்த குற்றவாளி

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவகுமார் என்பவனை போலிஸ் கைது செய்துள்ளது. இவர் கடந்த 10 நாட்களுக்கு ஜாமீனில் வெளிவந்துள்ளார். தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த பெண் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அந்தப்பெண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளான். இதனையடுத்து அங்கிருந்து தப்பியோட முயன்றவனை அருகில் இருந்தவர்கள் மடக்கிப்பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories