இந்தியா

Fastag அட்டைகள் பற்றாக்குறையால் அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்!

உரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் ஃபாஸ்டேக் முறையை அரசு அமல்படுத்தியதால், மின்னணு அட்டைகள் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்

Fastag அட்டைகள் பற்றாக்குறையால் அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தானியங்கி கட்டணம் வசூலிக்கும் விதமாக ஃபாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.

ஏற்கெனவே ஜிஎஸ்டியை அமல்படுத்தி பொருளாதாரத்தை சீர்குலைத்தது போல, ஃபாஸ்டேக் முறையையும் பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.

Fastag அட்டைகள் பற்றாக்குறையால் அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்!

அங்கீகரிக்கப்பட்ட சில வங்கிகளில் ஆதார், வாகன சான்றிதழ், புகைப்படம் உள்ளிட்டவற்றை கொடுத்து ஃபாஸ்டேக் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

போதிய ஃபாஸ்டேக் அட்டைகள் கையிருப்பு இல்லாத காரணத்தால் வாகன ஓட்டிகளை வங்கிகள் அலைக்கழித்து வருகின்றன.

இந்நிலையில், டிச.,15க்குள் ஃபாஸ்டேக் அட்டைகளை வாகன ஓட்டிகள் பெற்றாகவேண்டும் என ஒருபுறம் மத்திய அரசு எச்சரித்து வருகிறது. மறுபுறம் வங்கிகளின் வசம் போதிய ஃபாஸ்டேக் அட்டைகளை வைத்திருக்காதது பொதுமக்களை எரிச்சலடைய வைக்கிறது.

Fastag அட்டைகள் பற்றாக்குறையால் அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்!

ஏற்கெனவே பணமதிப்பிழப்பின் போதும் இதே போல மக்கள் நலன் எனும் பேரில் அவர்களை அலைக்கழித்தது. தற்போது ஃபாஸ்டேக் எனும் முறையால் வரி மேல் வரி செலுத்த வைத்து இன்னும் மக்களுக்கு இன்னல்களையே இந்த பாஜகவின் அரசு அளித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories