இந்தியா

இலக்கை மீறி 102% தாண்டிய நிதிப்பற்றாக்குறை... என்ன செய்யப்போகிறது பா.ஜ.க. அரசு?

நாட்டின் நிதிப்பற்றாக்குறை 102% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலக்கை மீறி 102% தாண்டிய நிதிப்பற்றாக்குறை... என்ன செய்யப்போகிறது பா.ஜ.க. அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு ஆண்டின் அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, செலவினம் மற்றும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசம் 7 லட்சத்து இருபதாயிரத்து 445ஐ தொட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவினம் 27 லட்சத்து 86 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், அரசின் மொத்த செலவினம் 16 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை அளவை, 3.3 சதவிகிதம் என்ற அளவில் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. அதன் படி, நடப்பு நிதியாண்டின் நிதி பற்றாக்குறை 7 லட்சத்து 3 ஆயிரம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த இலக்கை மீறி முதல் 7 மாதங்களிலேயே நிதிப்பற்றாக்குறை தாண்டியுள்ளது. நிதிப்பற்றாக்குறைக்கு அதிகரிப்புக்கு மத்திய அரசின் வரி வருவாய் குறைந்து போனதே காரணம் எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories