இந்தியா

திருமணம் செய்து கொள்வதாக ரவுடியை நம்ப வைத்த பெண் போலிஸ் : முடிவு என்ன ஆனது தெரியுமா?

உத்திர பிரதேசத்தில் பிரபல ரவுடியை திருமணம் செய்வதாகக் கூறி பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக ரவுடியை நம்ப வைத்த பெண் போலிஸ் : முடிவு என்ன ஆனது தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்திர பிரதேசம் மாநிலம் மஹோப்பா மாவட்டத்தின் பிஜோரி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்கிஷன் சவுபே. இவர் மீது கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 16 வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். இவரைக் கண்டுப்பிடிக்க முடியாமல் போலிஸார் தினறி வந்துள்ளனர். மேலும் ரவுடி சவுபேவைப் பற்றி தகவல் கொடுப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என போலிஸார் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் ரவுடி சவுபேவை பிடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில், ரவுடி சவுபேவைப் பிடிக்க பிஜோரி காவல்நிலை பெண் சப் இன்ஸ்பெக்டர் துணிச்சலான முடிவு ஒன்றை எடுத்தார்.

ரவுடி சவுபே திருமணத்திற்கு பெண் பார்த்து வருவதை தெரிந்துக்கொண்டார் பெண் எஸ்.ஐ. பின்னர் வேறு ஒரு பெணின் அடையாள அட்டை மூலம் புதிய சிம் கார்ட் ஒன்றை வாங்கி, அந்த எண்ணில் இருந்து ரவுடியை தொடர்பு கொண்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக ரவுடியை நம்ப வைத்த பெண் போலிஸ் : முடிவு என்ன ஆனது தெரியுமா?

சிறிது நேரத்தில் ரிங்க் போனது ரவுடி போனை எடுக்க ‘ராங் நம்பர்., சாரி’ என சொல்லிவிட்டு பெண் சப் இன்ஸ்பெக்டர் அழைப்பைத் துண்டித்துள்ளார். வந்த செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில் அது போலிஸ் இல்லை, வேறு ஒரு பெண் என சவுபே தெரிந்துக்கொண்டார்.

பின்னர் வேறு ஒருநாள், அதே போல் செல்போனுக்குத் தொடர்பு கொண்டு, மீண்டும் ‘ராங்க் நம்பர்.,சாரி’ என பேசி அழைப்பை துண்டிக்க, அடுத்தடுத்து தொடர்ந்து பேசி நட்பாக பழக ஆரம்பித்துள்ளனர். பின்னர் திருமணம் செய்துக்கொள்வதாக பெண் சப் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

நேரில் பேசி முடிவு செய்யலாம் எனக் கூறி ரவுடி கோயிலுக்கு வர சொல்லியுள்ளார். அதனை நம்பி ரவுடி கோயிலுக்கு வர மாறுவேடத்தில் இருந்த போலிஸார் ரவுடியை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரைக் கைது செய்து சிறையில் அடைந்தனர். பாதுகாப்பு கருதி பெண் சப் இன்ஸ்பெக்டர் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories