இந்தியா

பா.ஜ.க அரசின் முத்ரா கடன் திட்டம் படுதோல்வி? ; வாராக் கடன் அதிகரிப்பு : ஆர்.பி.ஐ துணை கவர்னர் கவலை!

பா.ஜ.க அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் வழங்கியதால் வராக் கடன் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எம்.கே.ஜெயின் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அரசின் முத்ரா கடன் திட்டம் படுதோல்வி? ; வாராக் கடன் அதிகரிப்பு : ஆர்.பி.ஐ துணை கவர்னர் கவலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் நாட்டில் பல சிறு-குறு தொழில்கள் முற்றிலும் முடங்கிபோய்யுள்ளன. இதனால் வங்கிகளில் கடன் பெற்று தொழில் நடத்திவந்த பல நிறுவனங்கள் நஷ்டத்தால் தங்களின் கடனை திருப்பி செலுத்தமுடியாத நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் பல வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்துள்ளதாவும், அதனால் வங்கிகள் முடங்கி போகும் அபாயத்தில் உள்ளதாகவும் பெருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பா.ஜ.க அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் வழங்கியதால் வராக் கடன் அதிகரித்து வருவது கவலை தருவதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எம்.கே.ஜெயின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்மூலம் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் கடன்கள் வழங்கப்பட்டது.

எம்.கே.ஜெயின்
எம்.கே.ஜெயின்

குறிப்பாக கடந்த 2016-2017ம் ஆண்டில், 75,315 கோடி ரூபாயும், 2017-2018-ம் ஆண்டில் 46,437 கோடியும் மற்றும் 2018-2019ம் ஆண்டில் 3,11,811 கோடி அளவிற்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்களில் தெரியவந்தது.

இந்நிலையில், இதுதொடா்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்.கே.ஜெயின், “முத்ரா திட்டத்தால் பலர் பயனடைந்துள்ளனர். ஆனால், இந்த திட்டத்தில், வாராக் கடன் அதிகரித்து வருகிறது.

இது கவலை அளிப்பதாக உள்ளது. கடனை வழங்குவதற்கான மதிப்பீட்டு கட்டத்திலேயே, வாங்குபவர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும், கடன்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்” என அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories