இந்தியா

மோடி ஆட்சியில் 6 மாதத்தில் ரூ.95,760 கோடியை இழந்த வங்கிகள் : நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிதியமைச்சர்!

கடந்த 6 மாத்தில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 95 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் நடக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. அதில் பொதுத்துறை வங்கிகளில் தான் அதிக மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தில் கடந்த காலங்களில், பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 95 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின் படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 6 மாதத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரத்து 743 வங்கி மோசடி சம்பவங்கள் நடைபெற்றதாக கூறினார்.

மோடி ஆட்சியில் 6 மாதத்தில் ரூ.95,760 கோடியை இழந்த வங்கிகள் : நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிதியமைச்சர்!
கோப்பு படம்

மேலும், இந்த காலகட்டத்தில், பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் 95 ஆயிரத்து 760.49 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாகவும், செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களில் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் விளக்கம் அளித்தார்.

முன்னதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, பாரத் ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories