இந்தியா

சிவசேனா-பா.ஜ.க ‘இந்துத்துவ’ கூட்டணி முறிவு : அதிகார மோதல் மட்டுமே காரணமா? - பின்னணி என்ன?

சிவசேனாவை வீழ்ச்சிலிருந்து காப்பாற்ற அதிகாரத்திற்கு வருவது மட்டுமே ஒரே தீர்வு என்பதை உணர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.

சிவசேனா-பா.ஜ.க ‘இந்துத்துவ’ கூட்டணி முறிவு : அதிகார மோதல் மட்டுமே காரணமா? - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள்; இந்து மதமே உயர்வாகக் கருதப்படவேண்டியது” என்பது தான் ஆர்‌.எஸ்‌.எஸ் இயக்கத்தின் நீட்சியாக இருக்கும் பா.ஜ.கவையும், அரபிக்கடலோரம் 60-களில் தொடங்கப்பட்ட சிவசேனாவையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறது. இதுவரை இந்துத்துவா எனும் புள்ளியால் நீடித்த கூட்டணி தற்போது முறிந்திருக்கிறது. இரண்டு கட்சிகளும் இப்போது பிரிந்து செல்ல ஆட்சி அதிகாரம் மட்டும்தான் காரணமா?

மராட்டியத்தில் 90-களில் பா.ஜ.க உதவியுடன் சிவசேனா ஆட்சியைப் பிடித்தது. அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துத் தான் தேர்தலைச் சந்தித்து வந்திருக்கின்றன. தேர்தல் அரசியலில் பா.ஜ.க ஒட்டுமொத்தமாக மராட்டி, மாலி, தலித், மார்வாரி, பிராமின் ஆகியோரின் ஓட்டுகளைக் குறிவைத்து இயங்கும். ஆனால் சிவசேனா குறிவைக்கும் ஓட்டுகள் என்பது மராட்டியர்களின் ஓட்டுகள் மட்டுமே.

முந்தைய காலங்களில் மராட்டியர்கள் தங்கள் ஒரு இந்துவாக மட்டுமே பார்ப்பார்கள்; மராட்டியர்களாக பார்க்கமாட்டார்கள் என்பதை பால் தாக்கரே மாற்றிக்காட்டினார். இதுதான் இரண்டு கட்சிகளின் இந்துத்துவா கோட்பாடுகளில் உள்ள வேறுபாடுகள்.

1970-களில் பா.ஜ.கவிற்கு முன்னர் ஜனசங்கத்துடன் இணைந்து சில தேர்தல்களை எதிர்கொண்டது சிவசேனா. அதன்பின்னர் இந்துத்துவா கொள்கையுடைய கட்சிகளை ஒன்றிணைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கின. தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை வரவே கூட்டணி பிரிந்தது. அதன் பின்னர் 80-களின் இறுதியிலும், 90களிலும் அயோத்தி விவகாரம், ஷா பனோ வழக்கு ஆகியவற்றால் பா.ஜ.க-வும் சிவசேனாவும் இணைந்தன. குறிப்பாக, இஸ்லாமிய எதிர்ப்பு என்பது சிவசேனாவுக்கும், பா.ஜ.கவிற்கும் பொதுவான விவகாரமாக இருந்தது. 1995 சட்டமன்றத் தேர்தல், 1998 & 99 நாடாளுமன்ற தேர்தல்களில் இந்தக் கூட்டணி தொடர்ந்தது.

சிவசேனா-பா.ஜ.க ‘இந்துத்துவ’ கூட்டணி முறிவு : அதிகார மோதல் மட்டுமே காரணமா? - பின்னணி என்ன?

ஒரு கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் அதன் முன்னோடியாகப் போற்றப்படுவது வழக்கம். பால் தாக்கரே இந்துத்வவாதியாக போற்றப்பட்டார். அதுகுறித்து மாற்றுக் கருத்து தெரிவிக்க பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்கள் கூட தயங்கினார்கள். 1960களில் தொடங்கி 2002ம் ஆண்டு வரை மட்டுமே அது நீடித்தது.

மராட்டியத்தில் தென்னிந்தியர்கள் மற்றும் அண்டை மாநிலத்தவரை சிவசேனா விரட்டி அடித்தது. அதில் குஜராத்திகளும் அடங்குவர். 2002ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான குஜராத் கலவர சம்பவத்திற்குப் பிறகு தீவிர இந்துத்வவாதியாக மோடி கொண்டாடப்பட்டார். இதை பால் தாக்கரே பத்து ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவிட்டார் என்று சிவசேனா ஆதரவாளர்கள் அதற்கு பதிலடி கொடுத்தனர். குஜராத்தில் மோடி வளர்ந்துகொண்டிருந்தார். 2013ம் ஆண்டு 3வது முறையாக முதல்வரானார் மோடி. அன்றைய காலகட்டதில் சிவசேனா சுஷ்மாவை தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக நிறுத்த விரும்பியது. ஆனால் பா.ஜ.க-வால் தீவிர இந்துத்வவாதியாக பார்க்கப்பட்ட மோடி முன்னிறுத்தப்பட்டார்.

சிவசேனா-பா.ஜ.க ‘இந்துத்துவ’ கூட்டணி முறிவு : அதிகார மோதல் மட்டுமே காரணமா? - பின்னணி என்ன?

வாஜ்பாய், எல்.‌கே.அத்வானி ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் வரை பால் தாக்கரே உடனான அரசியல் கூட்டணி கணக்குகளை முடிவு செய்வதில் பாலமாக பிரமோத் மகாஜன் இருந்து வந்தார். 2006ம் ஆண்டு அவர் விபத்தில் இறந்தபிறகு 2014 வரை கோபிநாத் முண்டே முக்கியப் பங்காற்றினார். அதன் பின்னர் மோடி, அமித்ஷா, பட்னாவிஸ் உள்ளிட்ட எவரும் சிவசேனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படவில்லை.

மராட்டியத்தில் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதில் தாக்கரேவின் இல்லமான மாட்டோஸ்ரீ (Matoshree) முக்கியப் பங்கு வகித்தது. ஆனால் 2012ம் ஆண்டு தாக்கரே மறைவுக்குப் பிறகு தலைவர்கள் அங்கு வருவது குறைந்துவிட்டது. இதை உத்தவ் தாக்கரே ரசிக்கவில்லை. அதன் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் எப்போதும் இல்லாத அளவிற்கு சிவசேனாவை விட அதிக இடங்களில் போட்டியிட பா.ஜ.க விரும்பவே கூட்டணி உடைந்தது. பா.ஜ.க 122 இடங்களிலும், சிவசேனா 68 இடங்களிலும் வெற்றி பெற்றது. 1995ம் ஆண்டு பா.ஜ.க 65 இடங்களிலும், சிவசேனா 73 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வித்தியாசமே பா.ஜ.க மராட்டியத்தில் எப்படி ஆதிக்கத்தைச் செலுத்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சிவசேனா-பா.ஜ.க ‘இந்துத்துவ’ கூட்டணி முறிவு : அதிகார மோதல் மட்டுமே காரணமா? - பின்னணி என்ன?

2014 கூட்டணி முறிவு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி என்று இருந்த நிலையில் 2014 தொடங்கி 2019 வரை பா.ஜ.கவை சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. இதில் உச்சகட்டமாக 2017ம் ஆண்டு நடந்த மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க எந்த அளவிற்கு நகரங்களில் வளர்ந்து இருக்கிறது என்பது வெளிப்படையானது.

முன்னர் 75 இடங்களில் வெற்றி பெற்றிருந்த சிவசேனா 84 இடங்களைப் பிடித்தது. பா.ஜ.க 31 இடங்களிலிருந்து 82 இடங்களில் வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதற்கு முன்னர் வரை 35 இடங்களுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெற்றதே இல்லை. கிராமப்புறங்களில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தங்களது இடங்களைத் தக்க வைத்துக்கொண்ட நிலையில் நகர்ப்புறங்களில் சிவசேனாவின் இடங்களை பா.ஜ.க கைப்பற்றியது.

சிவசேனா-பா.ஜ.க ‘இந்துத்துவ’ கூட்டணி முறிவு : அதிகார மோதல் மட்டுமே காரணமா? - பின்னணி என்ன?

சிவசேனாவை இந்த வீழ்ச்சிலிருந்து காப்பாற்ற அரசியல் அதிகாரத்திற்கு வருவது மட்டுமே ஒரே தீர்வு என்பதை உணர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். மத்தியில் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க இதற்கு சம்மதிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த பின்னர் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறார்.

இந்துத்துவ கொள்கை கொண்ட பா.ஜ.க, மராட்டியத்தில் தங்களை அழிக்க நினைப்பதை நேரடியாக உணர்ந்த பின்னரே இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது சிவசேனா. இந்த முறிவுக்கு முதல்வர் பதவிக்கான மோதல் மட்டுமே காரணமல்ல. இரு கட்சிகளில் இந்துத்துவத்தின் பிரதிநிதி யார் என்பதற்கான மோதலே இதன் தலையாய புள்ளியாக இருக்கிறது.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories