இந்தியா

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு - குளிர்கால கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரும் முக்கிய பிரச்னைகள்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி துவங்க உள்ளதையடுத்து, வரும் 17ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு - குளிர்கால கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரும் முக்கிய பிரச்னைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி துவங்க உள்ளதையடுத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரும் 17ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, மத்திய அமைச்சர் ‌ராஜ்நாத் சிங் தலைமையில் கூடி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 13ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

குளிர்கால கூட்டத் தொடரில் தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேசமயம் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு - குளிர்கால கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரும் முக்கிய பிரச்னைகள்!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி மோதலால் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியுள்ளது. இதனால் குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளுடன் கைகோத்து சிவசேனா பிரச்சினைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக்கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

banner

Related Stories

Related Stories