இந்தியா

“சிசிடிவியா? செட்டாப் பாக்ஸா?” - 26 லட்சம் கொள்ளையடித்து அறியாமையால் மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்!

26 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அறியாமையால் மாட்டிக்கொண்டுள்ளனர்.

“சிசிடிவியா? செட்டாப் பாக்ஸா?” - 26 லட்சம் கொள்ளையடித்து அறியாமையால் மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

26 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அறியாமையால் மாட்டிக்கொண்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த சனிக்கிழமை வாடிக்கையாளர்கள் போல நுழைந்த கொள்ளையர்கள் சிலர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மாட்டிக்கொள்வோம் எனக் கருதிய திருடர்கள், சிசிடிவி யூனிட் என நினைத்து டிவியுடன் பொருத்தியிருந்த செட்-டாப் பாக்ஸை கழற்றி எடுத்துச் சென்றனர்.

பின்னர், இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் நகைக்கடை உரிமையாளர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார் நான்கு திருடர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

சிசிடிவி டிவிஆர் பாக்ஸுக்கு பதிலாக டிவி செட்-டாப் பாக்ஸை எடுத்துச் சென்றதால் கொள்ளையர்கள் மாட்டிக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டில் ஈடுபடுவோர் இப்படி அறியாமையால் மாட்டிக்கொள்வது இது முதல்முறையல்ல. முன்பொருமுறை ஏ.டி.எம் இயந்திரத்திற்கு பதிலாக பாஸ்புக் அச்சடிக்கும் இயந்திரத்தை திருடர்கள் தூக்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories