இந்தியா

தீராத காஷ்மீர் விவகாரம் : அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டதை வைத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான்!

சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்ட உருவபொம்மை வைக்கப்பட்டுள்ளது.

தீராத காஷ்மீர் விவகாரம் : அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டதை வைத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை சார்பில் பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை விரட்டும்போது இந்தியாவின் மிக் 21 ரக விமானத்தை இயக்கிய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானத்தை பாகிஸ்தான் நாட்டு இராணுவம் தாக்கியதில் தப்பிப்பதற்காக பாராசூட் மூலம் கீழே குதித்த அவர், அந்நாட்டு எல்லையில் விழுந்தார்.

தீராத காஷ்மீர் விவகாரம் : அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டதை வைத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான்!

அதன் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை சிறை பிடித்து வைத்திருந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்திய தூதரகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு மார்ச் 1ம் தேதி வாகா - அட்டாரி எல்லையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்து சிறைபிடித்திருப்பது போன்ற உருவபொம்மை ஒன்று அந்நாட்டு விமானப்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பாகிஸ்தானின் பிடியில் இருந்தபோது அபிநந்தனுக்கு டீ வழங்கப்பட்ட கப்பும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் அன்வர் லோதி, அபிநந்தன் கையில் டீ கப் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்துக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து இதுபோன்ற நிகழ்வு நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories