இந்தியா

கோசாலை அமைக்க நிலம் கொடுத்து உதவிய இஸ்லாமிய இளைஞர்... மத நல்லிணக்க செயலுக்கு பாராட்டு!

இஸ்லாமியர் ஒருவர் பசுக்களை பாதுகாக்கும் கோசாலை அமைக்க தனது நிலத்தை கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது.

கோசாலை அமைக்க நிலம் கொடுத்து உதவிய இஸ்லாமிய இளைஞர்...  மத நல்லிணக்க செயலுக்கு பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க ஆட்சியில், பசுக்கள் மீதான கரிசனம் மிகுந்த பசுக் காவலர்கள் அதிகரித்திருக்கும் வேளையில், பசு தொடர்பான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. பசுக்கள் இறைச்சிகளுக்காக கடத்தப்படுவதாகக் கூறி இஸ்லாமியர்களை வன்மத்தோடு தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

பசு காவலர்களால் தொடர்ந்து பல கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. பசுக்கள் இஸ்லாமியர்களால் வதைக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படும் சூழலில், இஸ்லாமியர் ஒருவர் பசுக்களை பாதுகாக்கும் கோசாலை அமைக்க தனது நிலத்தை கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் 750 கோசாலைகளைத் திறக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில் முசாபர்நகர் மாவட்டத்தில் புர்காசி நகருக்கு அருகிலுள்ள கெய்கேரி சாலையில் கோசாலைகளுக்கான கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த கோசாலைகளுக்கான நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு ஷர்பத் அலி எனும் முஸ்லிம் இளைஞர் பரிசாக அளித்ததாக நிர்வாகக் குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தவிர அந்த இஸ்லாமியரின் நிலத்திலேயே ஒரு பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கோசாலை மற்றும் முதியோர் இல்லக் கட்டிடங்களை ஹனுமத் தாம் மஹந்த் சுவாமி கேஷ்வானந்த் மகாராஜ் நேற்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. கோசாலை அமைக்க இஸ்லாமியர் நிலம் அளித்தது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories