இந்தியா

லாபத்தில் 93% இழப்பு: வேலை பறிபோகும் அச்சத்தில் அசோக் லேலண்ட் ஊழியர்கள்- பொருளாதார சரிவால் திண்டாட்டம்

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்ளையால் அசோக் லேலண்ட் நிறுவனம் தனது விற்பணையில் 93 சதவிகித அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.


லாபத்தில் 93% இழப்பு: வேலை பறிபோகும் அச்சத்தில் அசோக் லேலண்ட் ஊழியர்கள்- பொருளாதார சரிவால் திண்டாட்டம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய வணிக சந்தையில் லாரி போன்ற கன ரக வாகன தயாரிப்பில் முன்னோடி நிறுவனமாக செயல்படும் அசோக் லேலண்ட், விற்பனையில் நெருக்கடியை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மாருதி சுசூக்கியைத் தொடர்ந்து, அசோக் லேலண்ட் நிறுவனமும் ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 48.4 சதவிகித வீழ்ச்சியுடன் 3 ஆயிரத்து 929 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 2018-ம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் 527 கோடியே 70 லட்சம் ரூபாய் லாபம் அடைந்துள்ளது. ஆனால் தற்போது வெறும் 38 கோடி ரூபாய் மட்டுமே லாபம் ஈட்ட முடிந்துள்ளது. இது 2018ஆம் ஆண்டின் இதே காலாண்டில் கிடைத்த லாபத்தை விட 92.6 சதவீதம் குறைவாகும்.


லாபத்தில் 93% இழப்பு: வேலை பறிபோகும் அச்சத்தில் அசோக் லேலண்ட் ஊழியர்கள்- பொருளாதார சரிவால் திண்டாட்டம்

அதாவது ஜூலை - செப்டம்பரில் வெறும் 28 ஆயிரத்து 938 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 44 சதவிகித வீழ்ச்சி என குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், மீடியம் மற்றும் கன ரக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 56 சதவிகிதமும், லோட் கமர்ஷியல் வாகனங்களின் உள்நாட்டு விற்பனையில் 11 சதவிகிதமும் சரிவையும் அசோக் லேலண்ட் நிறுவனம் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பங்குச் சந்தையில் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பங்குகளும் 0.13 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளன.

முன்னதாக மாருதி சுசூகி தன்னுடைய சரிவையே சமாளிக்க முடியாமல் இருக்கும்போது, அசோக் லேலண்ட் நிறுவனம் 93 சதவிகித சரிவை எப்படி சமாளிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், மோடி அரசினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருந்த முக்கிய நிறுவனங்கள் இன்று தங்களின் கடைகளை காலி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. இத்தகைய போக்கை தடுக்க அரசு போதியமுயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் தவறிவிட்டது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories