இந்தியா

“வெளிநாட்டுக்குச் சென்று இந்தியா நன்றாக இருப்பதாக கூறுவதால் எதுவும் சரியாகாது” : மோடியை சாடிய பிரியங்கா!

இந்தியா நன்றாக தான் இருக்கிறது என்று வெளிநாட்டிற்குச் சென்று நீங்கள் கூறுவதால் எதுவும் சரியாகாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

“வெளிநாட்டுக்குச் சென்று இந்தியா நன்றாக இருப்பதாக கூறுவதால் எதுவும் சரியாகாது” : மோடியை சாடிய பிரியங்கா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் வேலையில்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொருளாதார சரிவை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் உலக நாடுகளுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி, இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாக தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.

அதேபோல், சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, இந்தியாவின் நிலைமைநன்றாகவே உள்ளது என இந்தி மொழியில் தெரிவித்துவிட்டு நாடு திரும்பினார்.

இந்நிலையில் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும்போது, இந்தியாவில் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது என்று நீங்கள் கூறுவதால் இங்கு எதுவும் சரியாகாது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை, வேலையின்மைதான் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மிகவும் பெரிய நிறுவனங்கள் கூட ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்பி விடுகிறார்கள்.

முன்னதாக அனைத்தும் நன்றாக இருக்கிறது என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது அமைதியாக இருக்கிறார்களே அது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமாகி வருகிறது.

நாட்டின் ஜிடிபி முதல் காலாண்டில் 5.5. சதவீதமாகச் சரிந்துள்ளது, ஆட்டோமொபைல் துறை விற்பனை தொடர்ந்து 11 மாதங்களாகச் சரிவை நோக்கி வருகிறது. ஆனாலும் மத்திய பாஜக அரசு இந்த பொருளாதார மந்தநிலையை மூடி மறைக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

banner

Related Stories

Related Stories