இந்தியா

முடிவுக்கு வந்தது டெல்லி காவலர்களின் 11 மணி நேர போராட்டம்!

டெல்லியில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போலிஸாருக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முடிவுக்கு வந்தது டெல்லி காவலர்களின் 11 மணி நேர போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த சனிக்கிழமையன்று டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலிஸாருக்கும் வழக்கறிஞர்கள் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீதிமன்றம் எதிரே வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்கறிஞர்கள் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

இந்த வன்முறையில் டெல்லி வடக்கு இணை காவல் ஆணையர், 2 காவல் நிலையங்களின் கண்காணிப்பாளர்கள் உள்பட 20 போலீஸ்கார்கள் காயம் அடைந்தனர். இதேபோல் வழக்கறிஞர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு வழக்கறிஞர்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்தமாக சுமார் 50 பேர் காயம் அடைந்தனர்.

முடிவுக்கு வந்தது டெல்லி காவலர்களின் 11 மணி நேர போராட்டம்!

தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்க் நடத்தும் விசாரணை ஆறு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கான போலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கறிஞர்களுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வெளியே சீருடையுடன் போலிஸார் போரட்டத்தை தொடங்கினர்.

முடிவுக்கு வந்தது டெல்லி காவலர்களின் 11 மணி நேர போராட்டம்!

கையில் ‘காவலர்களை காப்பாற்றுங்கள்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு நியாயம் வேண்டும் எனக் கூறி அவர்கள் முழுக்கங்களை எழுப்பினர். அவர்களை உயர் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றனர்.

போலிஸாரின் திடீர் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போலிஸாருக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய வரலாற்றில் காவல்துறையினர் போராடுவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் துணை நிலை ஆளுநர், உயர் போலீஸ் அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories