இந்தியா

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை முன்னிலை நிலவரம்!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்.

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை முன்னிலை நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

கடந்த 21ம் தேதி இரண்டு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 61.13%, 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் 68% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே இருமுனையும், ஹரியானாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி இடையே மும்முனை போட்டியும் நிலவுகிறது.

இந்நிலையில் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகிறது.

இதில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 71 மற்றும் சிவசேனா 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 65 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அதில், 28 தொகுதிகளில் காங்கிரஸும், 36 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸும் முன்னிலை வகிக்கிறது.

அதேபோல, ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 39ல் பாஜகவும், 21ல் காங்கிரஸும் முன்னிலை வகிக்கிறது.

இரு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் இன்று மாலை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories