இந்தியா

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு பற்றி தெரியுமா? - ஆச்சரிய தகவல்!

நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி தொடங்கிய நிறுவனம் ஒன்று தற்போது தமிழகத்தில் சமூக - பொருளாதாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு பற்றி தெரியுமா? - ஆச்சரிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகின் உயரிய விருதான நோபல் பரிசுக்கு இந்தாண்டு தேர்வானவர்கள் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டில் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.

பொருளாதார அறிஞர்கள் அபிஜித் பானர்ஜி அவரது மனைவி எஸ்தர் டஃப்ளோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகிய மூன்று பேரும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பெருமையாகும்.

சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட பொருளாதார ஆய்வு சிறப்பாக உதவியதால் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற அபிஜித் - எஸ்தர் ஆகிய இருவருக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அபிஜித் அவரது மனைவிவ் எஸ்தர் ஆகிய இருவரும் அமெரிக்காவின் பிரபலமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

tn government officials and J-PAL leaders
tn government officials and J-PAL leaders

முன்னதாக, கடந்த 2003-ம் ஆண்டு அபிஜித் - எஸ்தர் இணைந்து அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மையத்தை (Abdul Latif Jameel – Poverty Action Lab (J-PAL)) உருவாக்கினர். இந்த மையம் உருவாக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்க வாழ் இந்தியருமான பொருளாதார நிபுணர் செந்தில் முல்லைநாதன் முக்கிய பங்கினை வகித்துள்ளார்.

அபிஜித் பானர்ஜியின் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மையத்துடன், 2014-ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார். அதன்படி, தமிழக தொடக்கக் கல்வி, இளைஞர்கள் வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவை குறித்து அந்த அமைப்பு ஆய்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்சியாக தற்போது, இந்த அந்த குழு தமிழகத்தில் சமூக - பொருளாதாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories