இந்தியா

குஜராத்தில் திடீரென இரண்டாக உடைந்த உயர்மட்ட பாலம்: ஆற்றில் சிக்கிய கார்கள் - வைரல் வீடியோ

குஜராத்தில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டிருந்த உயர்மட்ட பாலம் ஒன்று திடீரென இரண்டாக உடைந்ததால் அதன் மேல் சென்ற வாகனங்கள் நடு பாலத்தில் சிக்கி பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத்தில் திடீரென இரண்டாக உடைந்த உயர்மட்ட பாலம்: ஆற்றில் சிக்கிய கார்கள் - வைரல் வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தில் உள்ள மலன்கா கிராமத்தின் ஜுனாகத் சாலையில் ஆற்றின் நடுவே உயர்மட்ட பாலம் ஒன்று அமைந்துள்ளது.

குஜராத்தில் திடீரென இரண்டாக உடைந்த உயர்மட்ட பாலம்: ஆற்றில் சிக்கிய கார்கள் - வைரல் வீடியோ

இந்த பாலத்தின் மீது வழக்கம் போல் நேற்றும் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன. அப்போது அந்த பாலம் திடீரென இரண்டாக பிளந்து உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத்தில் திடீரென இரண்டாக உடைந்த உயர்மட்ட பாலம்: ஆற்றில் சிக்கிய கார்கள் - வைரல் வீடியோ

ஆற்றின் நடுவே உடைந்த பாலம் தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியதால் பெரும் அச்சம் உருவானது. இதனால் பாலத்தில் நடுப்பக்கத்தில் கார்களில் இருந்த மக்கள் பீதியில் உறைந்தனர்.

குஜராத்தில் திடீரென இரண்டாக உடைந்த உயர்மட்ட பாலம்: ஆற்றில் சிக்கிய கார்கள் - வைரல் வீடியோ

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையின் உடைந்த பாலத்துக்கு இடையே சிக்கிக்கொண்ட கார்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத்தில் ஆட்சி புரிந்துவரும் பாஜக அரசு தரமற்ற பாலத்தை கட்டியதாகவும், இதனாலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கோவை பாலம்
கோவை பாலம்

இதேபோல், தமிழகத்தில் உள்ள கோயமுத்தூரிலும் செங்குத்தாக பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும், இந்த பாலங்கள் விண்வெளிக்கே அழைத்துச் செல்லும் என்று நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories