இந்தியா

பெண் காவல்துறை அதிகாரியை தரக்குறைவாகப் பேசிய மகாராஷ்டிர பா.ஜ.க எம்.எல்.ஏ கைது!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவல்துறை அதிகாரியை தரக்குறைவாகப் பேசிய சம்பவத்தில், பா.ஜ.க எம்.எல்.ஏ சரண் வாக்மரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் காவல்துறை அதிகாரியை தரக்குறைவாகப் பேசிய மகாராஷ்டிர பா.ஜ.க எம்.எல்.ஏ கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிராவின் தும்சார் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் சரண் வாக்மரே. பா.ஜ.க-வைச் சேர்ந்த இவர், கடந்த செப்டம்பர் 16ம் தேதி தொழிலாளர்களுக்கு கட்டுமானப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது, அங்கே பணியில் இருந்த காவல்துறை பெண் அதிகாரியுடன் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் அதிகாரியை அவமானப்படுத்தும் வகையில் தரக்குறைவாகப் பேசி மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால், அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளான பெண் அதிகாரி, தும்சார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு வாக்மரே மீது அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல், பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல், அச்சுறுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில், எம்.எல்.ஏ சரண் வாக்மரே, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது பா.ஜ.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் இதுபோல அடிக்கடி அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், தாக்குதல் நடத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை பா.ஜ.க தலைமை கண்காணிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories