இந்தியா

பொதுத்தேர்வில் ஃபெயிலான இந்திக்காரர்களுக்கு மத்திய அரசின் உயர்பதவிகள் கிடைப்பது எப்படி?- அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் பெரும்பாலும் இந்தி பேசும் வட மாநிலத்தவர்களே தேர்ச்சி பெறுவது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத்தேர்வில் ஃபெயிலான இந்திக்காரர்களுக்கு மத்திய அரசின் உயர்பதவிகள் கிடைப்பது எப்படி?- அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசின் எழுத்தர் முதல் அதிகாரிகள் வரையிலான பணியிடங்களுக்கு SSC எனும் Staff Selection Commission தேர்வு நடத்தி வருகிறது. இதில் இந்திக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8,000 அதிகாரிகள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுவதில் 6,000 இடங்களுக்கு வட மாநிலத்தவர்களே பெரும்பாலும் தேர்ச்சி பெறுகின்றனர். பட்டதாரிகளுக்கு மட்டுமே நடத்தப்படும் இந்த தேர்வில் இந்தி பேசும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தேர்ச்சி பெறுகின்றனர்.

அதே சமயத்தில் எஞ்சியுள்ள 2,000 பணியிடங்களில் ஏழு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வெறும் 40 பேரும், தமிழகத்தில் இருந்து 300 பேரும் தேர்ச்சி பெறுகின்றனர். குறிப்பாக அந்த 300 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த வடநாட்டவர்களாகவே இருக்கின்றனர்.

உத்தரபிரதேசம் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் 60% மதிப்பெண்களைக் கூட எட்டமுடியாதவர்கள் எவ்வாறு மத்திய அரசுக்கான அதிகாரிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியமர்த்தப்படுகின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், Mass Copying எனும் முறை உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறும். தேர்தல் சமயத்தில் வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவது போல, தேர்வு மையங்களிலும் இந்த மாஸ் காபியிங் நடைபெறும். இதுமட்டுமல்லாமல் ஆசிரியர்களே வினாத்தாளை கொடுத்து அதற்கான விடைகளையும் கொடுத்துவிடும் வழக்கம் இன்னும் மோசம்.

பொதுத்தேர்வில் ஃபெயிலான இந்திக்காரர்களுக்கு மத்திய அரசின் உயர்பதவிகள் கிடைப்பது எப்படி?- அதிர்ச்சி தகவல்!

இது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டே அந்த மாநிலத்து இளைஞர்கள் அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மத்திய அரசின் மிகப்பெரிய பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கூறப்படுகிறது.

தேசிய அளவிலான பணியிடங்களுக்கு அனைத்து மாநில பட்டதாரிகளுக்கும் பங்கு கிடைக்க மத்திய அரசு உறுதி செய்து, இந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவேண்டும். மேலும், உச்சநீதிமன்ற மேற்பார்வையில், நீதிமன்ற பார்வையாளர்களின் முன்னிலையில் இந்த தேசியப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு நடைபெற்று அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கு கிடைக்கும் வண்ணம் செய்தால் தமிழக பட்டதாரிகள் கட்டாயம் 8,000 பணியிடங்களில் பெருவாரியான பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்று சாதிப்பர் என்பது திட்டவட்டமாக கூறலாம். ஆனால், மத்திய அரசில் இவ்வளவு இடங்கள் இருந்தும், தமிழகத்தைச் சேர்ந்த தமிழனுக்கு ஒரு இடம் இல்லை என்ற நிலையை ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே இந்த நிலையை மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மாற்றும், முறைகேடுகளை தடுக்கும் என்ற நம்பிக்கையுடன் போட்டித் தேர்வாளர்கள் காத்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories