இந்தியா

“துப்பாக்கி முனையில் அடித்து துன்புறுத்தி, சிறுநீர் கழிக்கிறார்” : பா.ஜ.க தலைவர் மீது மனைவி புகார்!

உத்தர பிரதேச பா.ஜ.க தலைவர் பாபுராம் நிசாத் துப்பாக்கி முனையில் அடித்து துன்புறுத்தி, தன் மீது சிறுநீர் கழிப்பதாக, அவரது மனைவி நீது நிசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

“துப்பாக்கி முனையில் அடித்து துன்புறுத்தி, சிறுநீர் கழிக்கிறார்” : பா.ஜ.க தலைவர் மீது மனைவி புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவோ பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, டெல்லியில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகளே புகார் கொடுத்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வதாக சட்டக்கல்லூரி மாணவி புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டு போலிஸ் காவலில் இருக்கிறார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பாபுராம் நிசாத். அம்மாநில பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவராக இருந்து வருகிறார்.

“துப்பாக்கி முனையில் அடித்து துன்புறுத்தி, சிறுநீர் கழிக்கிறார்” : பா.ஜ.க தலைவர் மீது மனைவி புகார்!

இந்நிலையில், பாபுராம் நிசாத் அடித்துத் துன்புறுத்துவதாக, அவரது மனைவி நீது நிசாத், முகநூலில் பகிரங்கமாக குற்றச் சாட்டு வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,“என்னுடைய கணவர் என்னை அடித்துத் துன்புறுத்தினார். என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். என்னை சுட்டுவிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து, நான் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர்கள் இது குடும்பப் பிரச்சனை, பேசி சமாதானம் செய்துகொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

அவர்கள் என்னுடைய கணவருடன் நட்புடன் உள்ளனர். எனக்குத் திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. திருமணமானதிலிருந்தே அவர், என்னைத் துன்புறுத்தி வருகிறார். துப்பாக்கி முனையில் என்னை கொல்வதாக மிரட்டியும், என் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியும் வருகிறார்.

என்னுடைய சகோதரர்கள், பெற்றோர்களையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டுகிறார்” என கண்ணீருடன் மனைவி நீது நிசாத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் பிரதமர் மோடியும், முதல்வர் ஆதித்யநாத்தும் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories