இந்தியா

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளை, எதிர்த்து பேசிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் நீக்கம்!

நிதியமைச்சர் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பிய ஷமிகா ரவி பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்படுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளை, எதிர்த்து பேசிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் நீக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான ஷமிகா ரவி, இந்தியா பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருவதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் ட்விட்டரில் பொருளாதார தேக்க நிலை குறித்த ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஷமிகா ரவி, “இந்தியா தற்போது பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. இதனைச் சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து, தேசிய வளரச்சித் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.

பொருளாதாரத்தை சீர்படுத்த பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படும்; வெறும் ஒட்டுவேலைகள் பயன்தராது. பொருளாதார வீழ்ச்சியை நிதியமைச்கத்திடம் மட்டும் விட்டுவிடுவது, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியையும் கணக்குகள் துறையிடம் ஒப்படைப்பது போன்றதாகும்” என அவர் தெரிவித்திருந்தார்.

அதேப்போல இ-சிகரெட் தடை செய்யப்பட்டபோது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தார். அதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில்,“ அதிக வரிகள் இருக்கும் போது தடைகள் எதற்கு.?, இதேப்போல மற்ற சிகரெட் மற்றும் புகையிலைப்பொருட்கள் இருக்கும் போது இ-சிகரெட்டுக்கு மட்டும் தடைவிதிப்பது விசித்திரமாக உள்ளது.

சுகாதாரம் அல்லது நிதி இது இரண்டில் எந்த அடிப்படையில் தடை முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன லாஜிக் இருக்கு?” என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ஷமிகா ரவி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சஜ்ஜீத் சீனாய் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஷமிகா ரவி போன்றே தொடர்ந்து பொருளாதார மந்த நிலையை பேசிவரும் ரத்தின் ராய் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி அரசின் தவறான கொள்கையால் விளைந்த பொருளாதார மந்த நிலையை சுட்டிக்காட்டும் அதிகாரிகள், உறுப்பினர்களை தொடர்ந்து இதுபோன்று பதவியில் இருந்து நீக்குவது சரியல்ல, இதன்முலம் அரசு சிறப்பாக செயல்படமுடியாது என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories