இந்தியா

20 ஆண்டுகளாக பா.ஜ.க தயவால் தப்பித்த சின்மயானந்தா சிக்கியது எப்படி? - பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்!

கல்லூரி மாணவியை பாலியல் வல்லுறவு செய்த விவகாரத்தில் சின்மயானந்தா குறித்து வாக்குமூலம் அளித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட மாணவி.

20 ஆண்டுகளாக பா.ஜ.க தயவால் தப்பித்த சின்மயானந்தா சிக்கியது எப்படி? - பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் தியோரசி எனும் ஊரிலிருந்து 20 வயதில் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த கிருஷ்ணபால் மீண்டும் ஊர் திரும்பவில்லை. கிருஷ்ணபால் பின்னர் வலதுசாரி அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு 1980களின் கடைசியில் நடந்த ராமர் கோவில் இயக்கத்தில் பங்குபெற்றார். அதன் பின்னர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர், ஒருமுறை மத்திய அமைச்சர் என பா.ஜ.க-வில் செல்வாக்கு பெற்றார். அந்த கிருஷ்ணபால் தான் பாலியல் வழக்கில் சிக்கி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் சின்மயானந்தா.

ஆசிரமங்களில் தனது வாழ்க்கையைக் கழித்து வந்த கிருஷ்ணபால் (எ) சின்மயானந்தா பின்னாட்களில் பல ஆசிரமங்களைத் தொடங்கி இருக்கிறார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக்கப்பட்டார். அப்போதே ஒரு பெண்ணுடன் சண்டையிடுவது போன்ற வீடியோ சுற்றிவந்திருக்கிறது . அந்த விவகாரம் பா.ஜ.க தயவால் பெரிதாகப் பேசப்படவில்லை.

ஆசிரம அரசியலை வைத்தே அரசியலில் கொடிகட்டிப் பறந்த சின்மயானந்தாவுக்கு 2014ல் பா.ஜ.க-வில் நாடாளுமன்ற சீட் மறுக்கப்பட்டது. அப்போது முதல் சின்மயானந்தாவுக்கு பிரச்னை தொடங்கியது. 8 வருடங்களுக்கு முன்னர் அவர் மீது பதிவான பாலியல் வழக்கின் காரணமாக வாய்ப்பு மறுக்கபட்டது. பின்னர் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு வழக்கு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றம் செல்லவே வழக்கை தள்ளுபடி செய்ய தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் 20ம் தேதி சிறப்பு விசாரணை குழுவால் கைது செய்யப்பட்டு இருக்கிறார் சின்மயானந்தா.

20 ஆண்டுகளாக பா.ஜ.க தயவால் தப்பித்த சின்மயானந்தா சிக்கியது எப்படி? - பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்!

சின்மயானந்தா கைது செய்யப்பட்ட இத்தனை நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷாஜஹான்பூர் சட்டக் கல்லூரியில் சின்மயானந்தாவால் பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் "சின்மயானந்தா முதலில் மகள் என்றுதான் அழைத்தார். அவ்வப்போது படிப்பு குறித்துக் கேட்டு பாராட்டுவார். ஆனால் அவர் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்துள்ளார். “முதல் 5 வருட படிப்பை முடித்தபிறகு மேற்படிப்பை அங்கு தொடர அட்மிஷன் குறித்து கேட்டபோது சின்மயானந்தவை நேரில் பார்க்குமாறு கல்லூரி முதல்வர் சொல்லவே நேரடியாகச் சென்று சந்தித்தேன். அப்போது சின்மயானந்தா நன்றாகப் பேசினார். படிப்பிற்கு உதவித் தொகை தருவதாகவும் நம்பிக்கை அளித்தார். அதன்பின்னர் அங்கேயே வேலையும் தருவதாகச் சொன்னார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் சின்மயானந்தா என்னை மீண்டும் அழைத்தார். என் படிப்பு குறித்ததாக இருக்கும் என நினைத்துச் சென்றேன். சின்மயானந்தா அவரது செல்போனில் நான் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை என்னிடம் காட்டினார். நான் அதிர்ச்சியடைந்து அழத் தொடங்கினேன். அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது கல்லூரி விடுதியில் தங்கும்படியும் தனக்கு வேண்டியதைச் செய்யவேண்டும் எனவும் இல்லையென்றால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனவும் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.

20 ஆண்டுகளாக பா.ஜ.க தயவால் தப்பித்த சின்மயானந்தா சிக்கியது எப்படி? - பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்!

மகள் என்று சொன்னவர் நிர்வாண வீடியோ எடுத்து என்னை மிரட்டுவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சின்மயானந்தா தனக்கு சேவைசெய்ய வேண்டும் என்றும் ஆயில் மசாஜ் செய்யும்படியும் சொன்னார். ஆனால் பலமுறை நான் மறுத்துவந்த நிலையில் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

சின்மயானந்தா ஆசிரமத்தில் இருக்கும்போது காலை 6 மணிக்கு மசாஜ் செய்ய அழைத்துச் செல்வார்கள். அதன் பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் அழைத்துச் சென்று பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குவார்கள். பிற்பகலில் செல்வதைத் தவிர்க்க பலமுறை முயற்சி செய்வேன். முதலில் ஆயில் மசாஜ் செய்யச் சொன்னார்; செய்தேன். அவரது ஆடைகளைக் களையச் சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன்.

சின்மயானந்தா கொடூரமான முறையில் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார். அதன் பின்னர் தனியாக மருத்துவரை வைத்து சிகிச்சை அளித்தார்கள். மற்ற மருத்துவர்களிடம் சென்றால் விவகாரம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால் தனியாக மருத்துவரை வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சின்மயானந்தவின் ஆட்கள் தொடர்ந்து என் செயல்பாடுகளை கவனித்து வந்தார்கள். மசாஜ் செய்வதைத் தாண்டி மற்ற விஷயங்களுக்கு வற்புறுத்தியபோது தான் இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தேன்.

20 ஆண்டுகளாக பா.ஜ.க தயவால் தப்பித்த சின்மயானந்தா சிக்கியது எப்படி? - பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்!

இப்படி எனக்கு நடந்ததை வெளியில் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்பதால் அதற்கான ஆதாரத்தைத் திரட்ட முடிவு செய்தேன். என்னை வீடியோ எடுத்து மிரட்டும் அவருக்கு எதிராக வீடியோ ஆதாரத்தைப் பயன்படுத்த திட்டமிட்டேன்.

கண் கண்ணாடியில் கேமரா வைத்து அவரது பாலியல் கொடுமைகளை வீடியோவாகப் பதிவு செய்தேன்.” எனக் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சமர்ப்பித்த வீடியோக்கள் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வீடியோக்கள் உண்மையானது தான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் கட்சி, பதவியை வைத்து தப்பித்து வந்த சின்மயானந்தா தற்போது ஆதாரங்களுடன் சிக்கியிருக்கிறார்.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories