இந்தியா

M.E., / M.Tech படித்தால் இனி உதவி பேராசிரியர் ஆக முடியாது : தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் புதிய உத்தரவு!

பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற இனி எம்.இ., மற்றும் எம்.டெக்., படித்திருந்தால் மட்டும் போதாது என அறிவிப்பு!

M.E., / M.Tech படித்தால் இனி உதவி பேராசிரியர் ஆக முடியாது : தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் புதிய உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற இனி எம்.இ., மற்றும் எம்.டெக்., படித்திருந்தால் மட்டும் போதாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., முடித்திருந்தாலே போதுமானது என்ற விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய விதிகளின்படி எம்.இ., எம்.டெக்., படிப்புகளுக்குப் பிறகு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தியுள்ள 8 Module Course என்ற ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

M.E., / M.Tech படித்தால் இனி உதவி பேராசிரியர் ஆக முடியாது : தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் புதிய உத்தரவு!

மேலும், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்கனவே பேராசிரியராகப் பணியாற்றுவோரும் புதிய சிறப்புப் படிப்பை படித்தால் மட்டுமே பேராசிரியராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், தற்போது பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு சிக்கல் எழுந்துள்ளது.

மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகப்படுத்தி, அதற்கென தனியாக லட்சக் கணக்கில் பணம் வசூலிப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories