இந்தியா

“நிலவில் தொடர்ந்து ஆய்வு செய்ய முனைப்பு காட்டுவோம்!” - நம்பிக்கை அளிக்கும் இஸ்ரோ!

“பின்னடைவு குறித்து கவலைப்படாமல், நிலவில் தொடர்ந்து ஆய்வு செய்ய முனைப்பு காட்டுவோம்”என இஸ்ரோ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“நிலவில் தொடர்ந்து ஆய்வு செய்ய முனைப்பு காட்டுவோம்!” - நம்பிக்கை அளிக்கும் இஸ்ரோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நிலவின் தென் துருவத்தின் கடினமான பகுதியில் ஆய்வு செய்வதென்பது சாதாரண நிகழ்வு அல்ல. நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியதில் வேண்டுமானால் இந்தியா 4வது இடத்தில் இருக்கலாம். ஆனால் அதன் தென் துருவப்பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியாதான்.

ஆதலால், நிலவில் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நாடு முழுவதும் மட்டுமன்றி, சர்வதேச நாடுகளாலும் உற்றுநோக்கப்பட்டது. இருப்பினும் நிலவை நெருங்கும் சமயத்தில் சில தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் லேண்டரின் நிலை குறித்து அறியமுடியாமல் போனதாக இஸ்ரோ அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தலைவர்கள் என பலரும் இஸ்ரோவின் முயற்சிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து இஸ்ரோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சந்திரயான்-2 திட்டம் மிகவும் சிக்கலானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்தது'' என தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, “இந்த முயற்சி இஸ்ரோவின் முந்தைய பயணங்களுடன் ஒப்பிடும்போது ஒரு குறிப்பிடத்தக்க தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். கடந்த ஜூலை 22ம் தேதி அன்று சந்திரயான்-2 ஏவப்பட்டதிலிருந்து, இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் சந்திரயான்-2வின் முன்னேற்றத்தை ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்வதை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து வந்தது.

பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வெற்றிகரமான அளவுகோல்கள் வரையறுக்கப்பட்டன. அதன்படி சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கம் 95 சதவீதம் நிறைவேறி உள்ளது. பின்னடைவு குறித்து கவலைப்படாமல், நிலவில் தொடர்ந்து ஆய்வு செய்ய முனைப்பு காட்டுவோம்” என இஸ்ரோ அதில் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories