இந்தியா

தட்கல் முறையால் இந்திய ரயில்வே துறைக்கு இவ்வளவு வருவாயா? - ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

கடைசிநேர முன்பதிவினால் இந்திய ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்துள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளிவந்துள்ளது.

தட்கல் முறையால் இந்திய ரயில்வே துறைக்கு இவ்வளவு வருவாயா? - ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெடுந்தூர ரயில் பயணத்திற்கு கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தட்கல் என்ற முறையை இந்திய ரயில்வே 1997ம் ஆண்டு குறிப்பிட்ட ரயில் சேவைகளுக்கு அறிமுகப்படுத்தியது.

பின்னர் தொலைதூரம் செல்லும் அனைத்து ரயில்களுக்கும் 2004ல் விரிவுபடுத்தப்பட்டு, 2014ல் ப்ரீமியம் தட்கல் என்ற முறையும் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில், தட்கல் முறையால் ரயில்வே துறைக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு என்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தட்கல் முறையால் இந்திய ரயில்வே துறைக்கு இவ்வளவு வருவாயா? - ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதற்கு கடந்த 2016-19 ஆகிய 4 ஆண்டுகளில் 21 ஆயிரத்து 530 கோடி ரூபாய் தட்கலிலும், 3,862 கோடி ரூபாய் ப்ரீமியம் தட்கலிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 2,677 ரயில்களில் அமலில் உள்ள தட்கல் முறைக்கு 1.71 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக மொத்தம், கடந்த 4 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு தட்கல் முறை பதிவின் மூலம் 25, 392 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், ரயில்வே துறையையும் தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தில் இருக்கிறது மத்திய அரசு.

banner

Related Stories

Related Stories