இந்தியா

எத்தனை புதிய இந்தியாக்கள் தான் பிறக்கும்? : என்ன தந்திரம் இது மிஸ்டர் மோடி?

தங்கள் ஆட்சியின் தோல்வியை மறைக்க, புதிய இந்தியா பூதத்தைக் கிளப்புவது அக்கட்சியினருக்குப் புதிதல்ல.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதிய வருடம் பிறக்கிறதோ இல்லையோ ஆண்டுக்கு நான்கு முறை புதிய இந்தியா பிறப்பதாகக் கூறுவது பா.ஜ.க-வினரின் வாடிக்கை. பணமதிப்பு நீக்க நடவடிக்கையைச் செயல்படுத்தும்போதும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையைச் செயல்படுத்தும்போதும் கூட புதிய இந்தியா பிறந்துவிட்டதாக சூளுரைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், பா.ஜ.க-வினர் முழங்கும் இந்தப் புதிய இந்தியாவில் பிரச்னைகளைச் சந்திப்பதெல்லாம் சாமானிய மக்களே. ஆளுங்கட்சிக்கு கோடிகோடியாகக் கொட்டிக்கொடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் எந்தச் சிக்கலுமில்லை.

தூய்மையான இந்தியாவை உருவாக்கிக் காட்டுவோம் என்றார்கள். ஐந்து வருடங்களை முழுமையாக விழுங்கினாலும், இன்னும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஸ்வச் பாரத் எனக் கத்திக்கொண்டிருக்கும் நாட்டில் தினசரி மலக்குழி மரணங்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

தங்கள் ஆட்சியின் தோல்வியை மறைக்க, புதிய இந்தியா பூதத்தைக் கிளப்புவது அக்கட்சியினருக்குப் புதிதல்ல. இந்த முறையும், இந்தியாவில் நிலவிவரும் கடுமையான பொருளாதாரச் சரிவை மறைப்பதற்காக ஒரு புதிய இந்தியா கதையைச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் இன்று பிரதமர் மோடி காணொளிக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது, இந்தியா மிக வேகமாக மாறி வருவதாகவும், அது மக்களின் நலனுக்காக நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார் மோடி.

எத்தனை புதிய இந்தியாக்கள் தான் பிறக்கும்? : என்ன தந்திரம் இது மிஸ்டர் மோடி?

புதிய இந்தியாவில் ஊழலுக்கு இடமில்லை என கூறியிருக்கும் பிரதமர் மோடி, புதிய இந்தியா பொறுப்புள்ள அரசு மற்றும் பொறுப்புள்ள குடிமக்களின் சகாப்தம் எனவும் பேசியுள்ளார். ஆனால், ரஃபேல் ஊழல் போன்ற மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மறுக்க இயலாத நிலையால் தான் இருக்கிறது பா.ஜ.க.

பொருளாதார சரிவை பிரதமரும், நிதித்துறை அமைச்சரும் ஒப்புக்கொள்ள மறுக்கும் சூழலில், ரிசர்வ் வங்கியிடமிருந்து கையிருப்புத் தொகையைப் பறித்திருக்கிறது அரசு. பொருளாதார நெருக்கடியோ, பேரிடரோ ஏற்படாத காலகட்டத்தில் ஏன் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் கைவைக்க வேண்டும் எனக் கேட்டால் பதிலில்லை.

இவைகளுக்கு மத்தியில் தான் புதிய புதிய இந்தியாக்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள் பா.ஜ.க ஆட்சியாளர்கள். நம்மால் தான் இதுவரை பிறந்த எந்தப் புதிய இந்தியாவையும் கண்டுணர முடியவில்லை.

banner

Related Stories

Related Stories