இந்தியா

1000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்த நீதிமன்ற உத்தரவு : கொந்தளிக்கும் டெல்லி மக்கள்!

தரியா கஞ்சில் ஞாயிறுதோறும் நடைபெற்று வந்து புத்தக சந்தைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

1000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்த நீதிமன்ற உத்தரவு : கொந்தளிக்கும் டெல்லி மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

டெல்லியில் உள்ள ஷாஜகான்பாத் பகுதியில் அமைந்துள்ளது தரியாகஞ்ச் பகுதி. இங்கு ஞாயிறுதோறும் டெல்லி முழுவதும் இருந்து வரும் நூற்றுக்கணக்கான பழைய புத்தக வியாபாரிகள் கடை போடுவார்கள். இங்கு உலகில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் கிடைக்கும். இந்தியாவின் பிரபல எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் முதல் கல்லூரி மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் புத்தகங்கள் வாங்க இங்கு கூடுவர்.

டெல்லியின் பல்வேறு அடையாளங்களில் மிக முக்கியமான ஒன்றாக இருந்துவரும் தரியா கஞ்ச் புத்தக சந்தை இனி நடைபெறாது. இதற்குக் காரணம், தரியாகஞ்சில் ஞாயிறன்று நடைபெற்று வந்த புத்தகச் சந்தையை இனிமேல் நடத்தக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்தகச் சந்தையால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த முடிவால் 50 ஆண்டுகால வரலாறு முடிவுக்கு வருவதாக டெல்லி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி சுமார் 1,000 குடும்பங்கள் இருக்கின்றன. எனவே, போக்குவரத்தை வேறு வழியில் மாற்றவேண்டும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தகச் சந்தைக்குப் பயன்படுத்த ஒரு மைதானத்தை வழங்கி புத்தகச் சந்தையை மீண்டும் உயிர்பெற வைக்கவேண்டும் டெல்லி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

முன்னதாக, 1990ம் ஆண்டில் இந்த சந்தை மூடப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த சந்தை மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories