இந்தியா

“30% பெண்கள்தான் பெண்மையோடு இருக்கிறார்கள்” : ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

நாட்டில் வெறும் 30 சதவிகித பெண்களுக்குத் தான் பெண்மை உள்ளது என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 “30% பெண்கள்தான் பெண்மையோடு இருக்கிறார்கள்” : ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க-வின் மறைமுக செய்தித் தொடர்பாளராகவே பேசி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களை விட பெண்களே அதிக முக்கியத்துவத்தை அளிக்கின்றனர். ஆனால் பெண்கள் முன்பு போல் இல்லாததால் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும், ஆங்கிலமும், நகர வாழ்க்கையும் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயத்துக்கு வந்த குருமூர்த்தி, தற்போதைய காலகட்டத்தில் 30 சதவிகித பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர். அவ்வாறு பெண்மையுடய பெண்களை மட்டுமே தெய்வமாகக் கருதுவதாகவும் பேசியுள்ளார்.

 “30% பெண்கள்தான் பெண்மையோடு இருக்கிறார்கள்” : ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மேலைநாட்டுப் பெண்களைப் போன்று இந்திய பெண்களும் பெண்மையை இழந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது என்ற குருமூர்த்தியின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

குருமூர்த்தி, பெண்களை இழிவாகப் பேசுவதாக குற்றஞ்சாட்டி பலர் இணையத்தில் கொதித்து வருகின்றனர். இந்த நிலையில், பெண்கள் குறித்த குருமூர்த்தியின் இந்த பேச்சுக்கு வன்மையாக கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், தனது கருத்தை குருமூர்த்தி வாபஸ் பெற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆண்மையற்றவர்கள் என கடந்த 2017ம் ஆண்டு குருமூர்த்தி பேசியிருந்ததற்கு பெரும் எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories