இந்தியா

ப.சிதம்பரத்துக்கு 5 நாள் காவல்... டெல்லியை அதிரவைத்த தி.மு.க - 6 மணி வரை இன்று | செய்தித் தொகுப்பு

ப.சிதம்பரத்துக்கு 5 நாள் காவல்... டெல்லியை அதிரவைத்த தி.மு.க - 6 மணி வரை இன்று | செய்தித் தொகுப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Click> சி.பி.ஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்!

- நேற்று இரவு டெல்லியில் உள்ள இல்லத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்று பிற்பகல் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

- காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பும், குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லாததால் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என சிதம்பரம் தரப்பும் வாதங்களை முன்வைத்தனர்.- “ஒரே ஒரு நாள் மட்டுமே ப.சிதம்பரத்திடம் விசாரணை செய்தனர். சி.பி.ஐ. அழைப்பை சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை. விசாரிக்கும் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம். ஏன் அழைக்கவில்லை?” என வாதாடினார் கபில் சிபல்.- “ப.சிதம்பரத்திற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாதபோது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது. சிபிஐ-க்கு தேவை சிதம்பரத்தின் பதில் அல்ல அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய பதில்” எனக் காட்டமாக வாதம் செய்தார் சிதம்பரம் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி.

- இதனையடுத்து தீர்ப்பளித்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26-ம் தேதி வரை, 5 நாட்கள் சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது.

Click > காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

- காஷ்மீரின் அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க முன்னெடுத்த கண்டன் ஆர்ப்பாட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 15 உறுப்பினர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Click >அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்!

ப.சிதம்பரம் கைது மூலம் தி.மு.க-வுக்கும், காங்கிரஸுக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பான கேள்விக்கு, “ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்; அவர் கருத்துக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தி.மு.க மீது வீண் பழி - மு.க.ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததற்கு தி.மு.க-வின் வழக்கே காரணம் என அ.தி.மு.க-வினர் கூறுவது குறித்த கேள்விக்கு, “உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக தி.மு.க வழக்குத் தொடுக்கவில்லை; முறையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடுக்கப்பட்டது.

Click > 8 வழிச்சாலை திட்டம் குழப்பமாக இருக்கிறது - நீதிமன்றம்!

சென்னை - சேலம் 8 வழிச் சாலை அவசியமான திட்டம் என்றால் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம் ஆவது ஏன்? சாலை அமைக்க இத்தனை அவசரம் ஏன்? பாரத் மாலா திட்டத்தின் கீழ் 8 வழிச்சாலை உள்ளதா? அப்படி இருந்தால் அதற்கான அறிவிப்பானை எங்கே? எதற்காக சென்னை, சேலம் இடையே இந்த 8 வழிச்சாலை போடப்படுகிறது? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த 8 வழிச்சாலை திட்டம் குழப்பத்தை தான் ஏற்படுத்துவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories