இந்தியா

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக்குக்கு தடை - ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக்குக்கு தடை - ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் அக்டோபர் 2ம் தேதி முதல் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து ரயில் நிலைய அலுவலகங்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அக்டோபர் 2ம் தேதி முதல் மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக்குக்கு தடை - ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!

ரயில் நிலையங்களையும், ரயில்களையும் தூய்மையாக பாதுகாக்கும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும், ரயில் நிலைய வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் செல்லும் ரயில்களிலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories