இந்தியா

“உற்பத்தித் துறைகள் மட்டுமல்ல; வங்கிகளும் வீழ்ச்சியடையும்” : பா.ஜ.க அரசை எச்சரிக்கும் ஆய்வு நிறுவனம்!

இந்தியாவில் தற்போதுள்ள பொருளாதார குழப்ப நிலையால், பல்வேறு வங்கிகளிலும் வாராக்கடன் அதிகரித்து வங்கிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

“உற்பத்தித் துறைகள் மட்டுமல்ல; வங்கிகளும் வீழ்ச்சியடையும்” : பா.ஜ.க அரசை எச்சரிக்கும் ஆய்வு நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது; ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி முடக்கப்பட்டு, மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்கிகளும் தள்ளாடும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது ஒரு பொருளாதார ஆய்வு நிறுவனம்.

பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு துறைகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன. தவறான பொருளாதாரக் கொள்கைகளால் உற்பத்தித் துறைகளை சீர்குலைத்துள்ளது பா.ஜ.க அரசு.

இந்நிலையில், அமெரிக்காவில் தொடங்கி, பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள ‘மூடிஸ்’ என்கிற ஆய்வு நிறுவனம், பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார நிலை குறித்துத் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவின் பல துறைகளில் உற்பத்தி குறைந்து வருகிறது. இந்த நிலை அடுத்த ஓராண்டில் இன்னும் மோசமடையும். இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். ஆட்குறைப்பு, உற்பத்தி, வங்கி நிதி உள்ளிட்ட எல்லாவற்றையும் பாதிக்கச் செய்யும். இறுதியில் கடும் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும்.

“உற்பத்தித் துறைகள் மட்டுமல்ல; வங்கிகளும் வீழ்ச்சியடையும்” : பா.ஜ.க அரசை எச்சரிக்கும் ஆய்வு நிறுவனம்!

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நலிவு நிலை, விரைவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கும். இதைத் தொடர்ந்து, வங்கி சாராத நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும்.

இதனால், வங்கிகள் வாராக்கடனால் தத்தளிக்கும். ஏற்கனவே, சில வங்கிகள் வாராக்கடனில் தத்தளித்து அரசு உதவியால் மீண்டு வருமா என கேள்விக்குறி நிலவும் சூழலில் மேலும் சில வங்கிகளும் வீழ்ச்சியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த நிலையைப் போக்க தகுந்த பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளது அந்த ஆய்வறிக்கை.

banner

Related Stories

Related Stories