இந்தியா

விபத்தில் சிக்கியது நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் : மூவர் பலியான சோகம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மின்சார வயரில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கியது நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர்  : மூவர் பலியான சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டாற்று வெள்ளத்தில் வீடுகளும், உடைமைகளையும் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் நிர்கதியாகியுள்ளனர்.

பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, பலர் புதையுண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் உத்தரகாஷி மாவட்டத்தில் ஒரு மின்சார வயரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரும் விபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும், அவர்கள், கேப்டன் லால், கோ-பைலட் சைலேஷ், உள்ளூர் நபரான ராஜ்பால் என்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் அனுப்பப் பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் பலியான சோக நிகழ்வு அம்மாநில மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories