இந்தியா

சுதந்திர காஷ்மீர் கோரி இந்தியாவுக்கு எதிராக பிரிட்டனில் பாகிஸ்தானியர்கள் போராட்டம்: வீடியோ!

காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் பாகிஸ்தானியர்கள் போராட்டம்.

சுதந்திர காஷ்மீர் கோரி இந்தியாவுக்கு எதிராக பிரிட்டனில் பாகிஸ்தானியர்கள் போராட்டம்: வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய அரசு (மத்திய பாஜக அரசு) கடைபிடித்து, அதற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு பாகிஸ்தான் அரசு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை நாடி காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முறையிட்டிருந்தது பாகிஸ்தான். இதனையடுத்து, இன்று மாலை சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாட்டு பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சுதந்திர காஷ்மீர் கோரி இந்தியாவுக்கு எதிராக பிரிட்டனில் பாகிஸ்தானியர்கள் போராட்டம்: வீடியோ!

இதற்கிடையில், நேற்று இந்தியாவின் 73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சில பகுதிகளில் காஷ்மீர் விவகாரத்துக்கு எதிரான நிலையே தென்பட்டது.

பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது”, ”ஆக.,15 ஒரு கருப்பு தினம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சீக்கியர்களுக்கு எதிராகவும் சிலர் கோஷமிட்டனர்.

பாகிஸ்தானியர்களின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிட்டனில் உள்ள இந்தியர்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னை என்பதைத் தாண்டி, சர்வதேச அளவில் கவனிக்கப்படும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories