இந்தியா

நாடு முழுவதும் சுதந்திர தினம் ஆனால், காஷ்மீர் முன்னாள் முதல்வர்களுக்கு... ? - கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்

சுதந்திர தினத்தன்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களுக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர தினம் ஆனால், காஷ்மீர் முன்னாள் முதல்வர்களுக்கு... ? - கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது ஏன் என ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டதால், மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காஷ்மீர் அரசியல்வாதிகளை வீட்டுச்சிறையில் இன்றளவும் அடைத்துள்ளது மோடி அரசு.

இந்நிலையில், இந்தியாவின் 73வது சுதந்திர தினம் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படும் சமயத்தில் பிரிவினைவாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் போராடிய அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது ஏன்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 6ம் தேதியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? இரண்டு முன்னாள் முதலமைச்சர்களை வீட்டுச் சிறையிலும், ஒருவரை கைது செய்தும் வைத்திருப்பது ஏன்? என மத்திய அரசுக்கு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories