இந்தியா

வாலிபரின் வயிற்றில் 3.5 கிலோ இரும்பு பொருட்கள் : அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் ! ஏன்?

வயிற்று வலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் நூற்றுக்கணக்கான இரும்பு பொருட்கள் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாலிபரின் வயிற்றில் 3.5 கிலோ இரும்பு பொருட்கள் : அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் ! ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் 452 உலோகப் பொருட்களை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த இரும்புப் பொருட்கள் வயிற்றில் இருந்து நீக்கப்பட்டன.

வாலிபரின் வயிற்றில் 3.5 கிலோ இரும்பு பொருட்கள் : அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் ! ஏன்?

குஜராத்தின் அகமதாபாத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் வாலிபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இளைஞரின் வயிற்றில் ஏராளமான இரும்புப் பொருட்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாலிபரின் வயிற்றில் 3.5 கிலோ இரும்பு பொருட்கள் : அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் ! ஏன்?

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்ததில், இளைஞரின் வயிற்றில் இருந்து பூட்டு, பின், நகவெட்டி, நாணயம் என 3.5 கிலோ எடைகொண்ட 452 உலோகப் பொருட்களை நீக்கப்பட்டுள்ளது என அகமதாபாத் சிவில் மருத்துவமனை கல்பேஷ் பர்மார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தரப்பு கூறியுள்ளது. மேலும், 8 மாதத்திற்கும் மேலாக உலோகப் பொருட்களை சாப்பிட்டிருக்கிறார் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories