இந்தியா

ஆசையாய் வளர்த்த மரம் வெட்டப்பட்டதை பார்த்து கதறி அழுத சிறுமி : பசுமைத் தூதுவராக்கிய மணிப்பூர் அரசு !

தான் ஆசையாய் வளர்த்த மரங்களை வெட்டியதைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத சிறுமி, மணிப்பூர் மாநிலத்தின் பசுமை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசையாய் வளர்த்த மரம் வெட்டப்பட்டதை பார்த்து கதறி அழுத சிறுமி : பசுமைத் தூதுவராக்கிய மணிப்பூர் அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மணிப்பூர் மாநிலம் மாநிலம் கக்சிங் மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்பம் பிரேம்குமார் சிங். இவரின் மகள் வேலண்டினா, அருகில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் தனது வீட்டிற்கு அருகே இரு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்துள்ளார் வேலண்டினா.

இந்நிலையில், அங்கு சாலையை அகலபடுத்தும் பணிகள் நடந்தன. அப்போது சிறுமி வளர்த்த மரங்கள் சாலையை அகலப்படுத்துவதற்காக வெட்டப்பட்டன. மரங்களை வெட்டப்படுவதைக் கண்ட சிறுமி வேலண்டினா கதறி அழுதார். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

ஆசையாய் வளர்த்த மரம் வெட்டப்பட்டதை பார்த்து கதறி அழுத சிறுமி : பசுமைத் தூதுவராக்கிய மணிப்பூர் அரசு !

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் பசுமை தூதுவராகச் சிறுமி வேலண்டினா நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி பேசிய சிறுமி வேலண்டினா, ''நான்கு வருடத்திற்கு முன் அந்த மரக்கன்றுகளை நட்டேன். அவற்றை ஆசையாக வளர்த்து வந்தேன்.மரங்கள் வெட்டப்பட்டது வேதனையாக இருந்தது. நான் படித்து முடித்த பிறகு அதிக மரங்களை நட்டு வனங்களை பாதுகாப்பேன்'' இவ்வாறு தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories