இந்தியா

“பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன்” காஷ்மீர் நிலவரம் குறித்து மலாலா உருக்கமான பதிவு!

காஷ்மீர் குழந்தைகள் பெண்கள் பற்றி கவலைப்படுகிறேன் என காஷ்மீரின் நிலவரம் குறித்து மலாலா உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அது சமூக வலைதளத்தில் வைரலாக பரவு வருகிறது.

“பெண்கள், குழந்தைகள்  பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன்” காஷ்மீர் நிலவரம் குறித்து மலாலா உருக்கமான பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி அதிகாரங்களை வைத்துக்கொண்டு தேச மக்களின் நலன்களுக்கு எதிராக பா.ஜ.க தொடர்ச்சியாக செயல்படுகிறது என குற்றச்சாட்டி எழுந்துள்ள நிலையில், அது உண்மைதான் என நிருப்பிக்கும் விதமாக ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரங்களை பா.ஜ.க அரசு ரத்து செய்துள்ளது.

மேலும் மாநில அந்துஸ்தை பறித்து, யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி முன்னதாக எந்த ஒருமுடிவையும் வெளிப்படையாக அறிவிக்காமல், மக்களை ஒடுக்கி அதன் பின்பு சட்டத்தை நிறைவெற்றியது. இது மேலும் காஷ்மீர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களை சிறை பிடித்து, தொலைத் தொடர்ப்பு ரத்து, இணைய சேவை ரத்து, பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடல் என ஒட்டுமொத்த மாநிலத்தையும் முடக்கி வைத்துள்ளது.

இதற்கு தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து போராத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் குழந்தைகள் மற்றும் பெண்களின் நிலை குறித்து, அமைதிக்கான ‘நோபல்’ விருது வென்ற மலாலாயூசுப் சாய் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “நான் குழந்தையாக இருந்தது முதல் காஷ்மீர் மக்கள் போர்ச் சூழலில் தான் வாழ்ந்து வருகின்றனர். எனது அப்பா, அம்மா குழந்தையாக இருந்தபோதும் அதுதான் நிலை. எனது தாத்தா, பாட்டி இளமையாக இருந்த போதிலிருந்து இதுதான் நிலைமை. 70 ஆண்டுகளாக காஷ்மீர் குழந்தைகள் வன்முறைக்கு மத்தியில் தான் வாழ்கிறார்கள்.

தெற்கு ஆசியா தான் எனது குடும்பம். அதில் 1.8 பில்லியன் காஷ்மீர் மக்களும் வாழ்கிறார்கள். நாம் வெவ்வேறு கலாச்சாரம், மதங்கள், மொழிகளுடன் வாழ்கிறோம். நாம் அனைவரும் அமைதியாகத்தான் வாழ்கிறோம் என நம்புகிறேன். ஒவ்வொருவரும் போராட்டத்திலும், மற்றவர்களை காயப்படுத்துவதும் என இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று நான் அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி கவலைப் படுகிறேன். ஏனெனில் போர்ச் சூழலின் போது அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் தான். அதிகம் இழப்பதும் அவர்கள் தான்.

தெற்கு ஆசியாவில் இருக்கும் சர்வதேச சமூக அமைப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காஸ்மீர் மக்கள் பாதிப்பு குறித்து கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன். எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மனித உரிமைகளுக்காக போராடுவது மற்றும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பது அவசியமான ஒன்று. 70 ஆண்டு கால போராட்டத்தை அமைதியான முறையில் சுமூக தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories