இந்தியா

வாகா எல்லையை மூடியது பாகிஸ்தான் - காஷ்மீரை பிரிக்கும் இந்தியாவின் முடிவால் எல்லையில் பதற்றம்!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவுடனான வர்த்தகத்தை முறிப்பதாக பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.

வாகா எல்லையை மூடியது பாகிஸ்தான் - காஷ்மீரை பிரிக்கும் இந்தியாவின் முடிவால் எல்லையில் பதற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரித்து அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த 5ம் தேதி நிறைவேற்றியது மத்திய அரசு. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் தேசிய பாதுகாப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாகா எல்லையை மூடியது பாகிஸ்தான் - காஷ்மீரை பிரிக்கும் இந்தியாவின் முடிவால் எல்லையில் பதற்றம்!

இந்த கூட்டத்தில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா கவுன்சிலில் புகார் அளிக்க இருப்பதாக பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. இந்தியாவுடனான எல்லைத்தாண்டிய வாணிபத்தை ரத்து செய்யவும், வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்பவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை திரும்பப் பெறவும் அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 15ம் தேதி துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

வாகா எல்லையை மூடியது பாகிஸ்தான் - காஷ்மீரை பிரிக்கும் இந்தியாவின் முடிவால் எல்லையில் பதற்றம்!

இந்தியாவின் அடாரி, பாகிஸ்தானின் லாகூர் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான் வழியில் பறப்பதற்கு தடை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது பாகிஸ்தான்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள அவசர நடவடிக்கைகளை கைவிடுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் எடுக்கும் முடிவுகள், ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories