இந்தியா

உஷாராக இருங்கள் - மாநிலங்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பிய உள்துறை அமைச்சகம்!

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உஷாராக இருங்கள் - மாநிலங்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பிய உள்துறை அமைச்சகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள், காவல்துறை டிஜிபிக்கள், காவல்துறை ஆணையர்கள் அவசர சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அமைதிக்கு எவ்வித பங்கமும் வராதபடி பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதுகாப்பு படைகளை பயன்படுத்தி அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலையை பிரகடனப்படுத்தும் படியும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உஷாராக இருங்கள் - மாநிலங்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பிய உள்துறை அமைச்சகம்!

மேலும், பிற மாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும், ஒவ்வொரு மாநிலத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக காஷ்மீர் மாநிலத்தில் 35 ஆயிரத்துக்கும் மேலான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories