இந்தியா

பா.ஜ.க அரசு கவிழும்... தேர்தலுக்கு தயாராக இருங்கள்... ம.ஜ.த தொண்டர்களுக்கு குமாரசாமி அறிவுரை!

கர்நாடகாவில்  பா.ஜ.க. அரசு நீடிக்காது. விரைவில் பொதுத்தேர்தலோ இடைத்தேர்தலோ வரும் எதற்கும் தயாராக இருங்கள் என ம.ஜ.த தொண்டர்களுக்கு குமாரசாமி அறிவுரை.

பா.ஜ.க அரசு கவிழும்... தேர்தலுக்கு தயாராக இருங்கள்... ம.ஜ.த தொண்டர்களுக்கு குமாரசாமி அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து குமாரசாமி மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

அரசியல் இருந்து விலகுவதாகவும், தன்னை நிம்மதியாகவும், அமைதியான சூழலில் வாழ விடுங்கள் என்றும் நேற்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு குமாரசாமி பேட்டி அளித்திருந்தார்.

மேலும், அரசியலில் நல்லவர்கள் என்றும், மனிதர்களுக்காக பணி புரிவதற்கென்றும் யாரும் இல்லை என சாடிய அவர், அரசியல் போராடும் வலிமையை தான் இழந்துவிட்டதாகவும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மாண்டியா மாவட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய குமாரசாமி, ”எடியூரப்பாவின் ஆட்சி வெகுகாலம் நீடிக்காது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் அல்லது 224 தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம்.” என்றார்.

எனவே அனைத்திற்கும் தயாராக இருக்கவேண்டும் என ம.ஜ.த தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். எப்போதும் அதிருப்தியாக பேசிக்கொண்டிருக்கும் குமாரசாமி, தொண்டர்கள் மத்தியில் தன்னம்பிக்கையுடன் பேசியிருப்பது அவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories