இந்தியா

புதுச்சேரியில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை - முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

புதுச்சேரியில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை - முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் நலன் கருதி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி மாநிலத்திலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து, புதுச்சேரி அரசு சார்பில் பிளாஸ்டிக் தடை செய்வது குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை தீவிரமாக பரிசீலித்தது. இதன்படி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், ஜவுளி சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்து புதுச்சேரியில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று (ஆகஸ்டு - 2ந் தேதி) முதல் தடை விதிக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் தட்டுகள், உணவு பொருட்கள் ஒட்ட பயன்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட 10 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியின் படி தண்டிக்கப்படுவார்கள். இதன்படி அபராதமாக ரூ. 1 லட்சம் வரை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories