இந்தியா

உறுதியானது ‘காஃபி டே சித்தார்த்தா’வின் மரணம்... கொலையா? தற்கொலையா? விசாரணை தீவிரம்!

கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மாயமான நிலையில் இன்று அதிகாலை அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

உறுதியானது ‘காஃபி டே சித்தார்த்தா’வின் மரணம்... கொலையா? தற்கொலையா? விசாரணை தீவிரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இரண்டு நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேத்ராவதி ஆற்றில் இருந்து காஃபி டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தாவின் உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் அவர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், வருமான வரித்துறையினரின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா கடந்த திங்களன்று மாயமானார். இதனையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இவர், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார்.

உறுதியானது ‘காஃபி டே சித்தார்த்தா’வின் மரணம்... கொலையா? தற்கொலையா? விசாரணை தீவிரம்!

கடந்த திங்களன்று மாலை மங்களூருவுக்கு காரில் சென்றுக்கொண்டிருந்த சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் இறங்கி யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார்.

இதன் பின்னர், கார் டிரைவர் சித்தார்த்தாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் போலீசாரிடம் அளித்த பின்னர் சித்தார்த்தாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், கடைசியாக தனது நிறுவன ஊழியர்களுக்கு சித்தார்த்தா எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், இன்று அதிகாலை சித்தார்த்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றின் கரையோரத்தில் மீட்கப்பட்டது. இதனையடுத்து, சித்தார்த்தாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories