இந்தியா

சமஸ்கிருத மொழி கற்றுக்கொடுக்க 5கிராமங்களை தத்தெடுப்பு? பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பாஜக

சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இது பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சி என பலர் கருத்துதெரிவித்துள்ளனர்.

சமஸ்கிருத மொழி கற்றுக்கொடுக்க 5கிராமங்களை தத்தெடுப்பு? பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பாஜக
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க மீண்டும் ஆட்சி பொறுப்பில் அடியெடுத்து வைத்ததில் இருந்து இந்துத்துவா கருத்துக்களை தீவிரமாக மக்கள் மத்தில் புகுத்துகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் கடை, ஒரே நாடு ஒரே கல்வி கொள்கை போன்ற திட்டங்கள் இந்துத்துவா கொள்கையின் அடிப்படை ஆகும், மேலும் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பெரும் முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது என அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இயங்கிவரும் ராஷ்டிரிய சமஸ்கிருதம் சன்ஸ்தான், லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ் கிருத வித்யாபீடம் மற்றும் திருப்பதி ராஷ்டிரிய சமஸ் கிருத வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் சமஸ்கிருத மொழியை கற்பித்து வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்கள் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத மொழியை கற்பிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.

இதனையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனம் 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் 5 கிராமங்களைத் தத்தெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.

banner

Related Stories

Related Stories