இந்தியா

தேர்தலில் EVM, VVPAT இயந்திரங்களுக்காக செலவு செய்யப்பட்ட இமாலய தொகை!

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டன?

தேர்தலில் EVM, VVPAT இயந்திரங்களுக்காக செலவு செய்யப்பட்ட இமாலய தொகை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்காக மட்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மத்திய அரசு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் 10 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களும், அதற்கெற்ற வகையில் விவிபாட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்தத் தேர்தலில்தான் முதன்முறையாக அதிக எண்ணிக்கையில் விவிபாட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன . EVM இயந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை வாங்குவதற்காக ரூபாய் 3,901.17 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2018-19 பட்ஜெட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் EVM, VVPAT இயந்திரங்களுக்காக செலவு செய்யப்பட்ட இமாலய தொகை!

மக்களவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்றன. ஆனாலும், எல்லா கட்டத் தேர்தல்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தியே நடைபெற்றது.

தேர்தல் முடிந்து பா.ஜ.க மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், பா.ஜ.க முறைகேட்டில் ஈடுபட்டு இந்தத் தேர்தலில் வென்றதாக சமீபத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 64 பேர் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories