இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : நடுத்தர மக்களை ஏமாற்றிய 2019 பட்ஜெட்!

பெட்ரோல் - டீசல் வரி உயர்வால் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : நடுத்தர மக்களை ஏமாற்றிய 2019 பட்ஜெட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளதை அடுத்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படும் என மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்துவந்தது.

இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், “புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது” எனப் பேசினார்.

ஆனால், சொல்லிக்கொள்ளும்படியான எந்தப் பெரிய திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என பலரும் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். வருமான வரி உச்சவரம்பு சலுகை குறித்த அறிவிப்பு இல்லாதது நடுத்தர வர்க்கத்தினரை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

போதாக்குறைக்கு பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப்படும் என பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி எனக் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள். பெட்ரோல் விலை பெருமளவு மக்களைப் பாடாய்ப்படுத்தி வரும் நிலையில், மேலும் அதிகரித்திருப்பது மக்களிடையே அதிருப்திய்யை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories